25ஆவது சீன முதலீடு மற்றும் வர்த்தக சர்வதேச கண்காட்சி செப்டம்பர் 8 முதல் 11ஆம் நாள் வரை சீனாவின் ஃபூச்சியன் மாநிலத்தின் சியா மென் நகரில் நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சி பற்றிய செய்தியாளர் கூட்டம் ஒன்று 6ஆம் நாள் சியா மென் நகரில் நடைபெற்றது.
இந்த கண்காட்சியில், 120க்கும் மேலான நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த பிரதிநிதிக் குழுக்கள் கலந்துகொள்ளும். 51 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் காட்சியிடங்களை அமைக்கவுள்ளன. இப்போது அனைத்து ஆயத்தப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சி, பெருந்தகவல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, இணைய கண்காட்சியை முழுமைப்படுத்தும். இப்போது வரை 4000 திட்டப்பணிகள், இணையத்தின் மூலம் காட்சி வைக்கப்பட்டுள்ளன.