சீனத் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜூன் ஜுன் 2ஆம் நாள் 21ஆவது ஷாங்க்ரிலா உரையாடல் கூட்டத்தில் “உலகளாவிய பாதுகாப்பு பற்றிய சீனாவின் கண்ணோட்டம்” தொடர்பாக உரை நிகழ்த்தினார்.
டோங் ஜூன் கூறுகையில், மனித குலத்தின் பொது எதிர்கால சமூகத்தை உருவாக்கும் கருத்து மற்றும் மூன்று உலகளாவிய முன்மொழிவுகளை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்தார். ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் மக்கள் எப்போதும் நல்லிணக்கத்தை நாடி, அமைதியை நேசித்து, தற்சார்பு செய்து, சுய வலிமைக்காக முயற்சி செய்து, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்கின்றனர்.
“ஆசிய ஞானத்தைப் சீராக பயன்படுத்தி, ஒத்த கருத்தைத் திரட்டி, வேற்றுமையுடன் கருத்தொற்றுமையைக் கண்டறிய வேண்டும். பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, பன்னாடுகளின் நியாயமான பாதுகாப்பு நலனைப் பேணிகாத்து, நீதியான நியாயமான சர்வதேச ஒழுங்கைக் கூட்டாக உருவாக்கி, பிரதேசப் பாதுகாப்பு கட்டுக்கோப்பின் பங்கினை வெளிக்கொணர்ந்து, திறந்த எதார்த்த பாதுகாப்பு ஒத்துழைப்பை முன்னேற்றி, கடல் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான முன்மாதிரியை உருவாக்கி, புதிய ரக துறைகளிலான பாதுகாப்பு மேலாண்மையை வலுப்படுத்தி, பிரதேசப் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புதிய நிலைமையைத் திறந்து வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.