இன்று 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல் நினைவு தினம்..!!

Estimated read time 1 min read

இன்று (நவம்பர் 26, 2026) 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் 18-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் பயங்கரவாதிகள் 10 பேர், மும்பை நகருக்குள் 2008, நவம்பர் 26ல் கடல் வழியாக நுழைந்தனர். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், ஓபராய் ஓட்டல், தாஜ் மஹால் ஓட்டல், லியோ கபே, காமா மருத்துவமனை, யூதர்கள் சமுதாய மையம் ஆகிய இடங்களில் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 18 பேர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர்.

பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் 60 மணி நேரம் சண்டை நடந்தது. இதில் பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே, ராணுவ மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன், மும்பை கூடுதல் கமிஷனர் அசோக் காம்தே, இன்ஸ்பெக்டர் விஜய் சலாஸ்கர், உதவி எஸ்.ஐ., துக்காராம் ஓம்லே உள்ளிட்டோர் வீர மரணம் அடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் 2012ல் துாக்கிலிடப்பட்டான்.

இந்த தாக்குதல் சம்பவத்தின் 18வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. மும்பை நகரின் முக்கிய வீதிகளில் வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படையினரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன. அதற்கு பொதுமக்கள் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.

Please follow and like us:

You May Also Like

More From Author