தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று, ஜூன் 16 கனமழை எச்சரிக்கையினை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக நீலகிரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால், மாவட்டத்தில் உள்ள நான்கு தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றிலிருந்து ஜூன் 20 வரை மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம்: ஆறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை- நீலகிரியின் நான்கு தாலுகாவில் பள்ளிக்கு விடுமுறை
