2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், 2029 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் நாட்டின் பிரதமராவார் என தவெக எம்.எல்.ஏ கனிமொழி தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வெளியான ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக்கணிப்பில் நாட்டின் அடுத்த பிரதமர் ரேஸில் விஜய்க்கு 9.2% ஆதரவு இருப்பதாகத் தகவல்கள் வெளியானதை அடுத்து இத்தகைய விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
புகைச்சலில் இருக்கும் காங்கிரஸ் கட்சியினர் இதனால் மீண்டும் கொந்தளிக்க துவங்கியுள்ளனர்.
2029ல் விஜய் பிரதமர் ஆவார்: தவெக எம்.எல்.ஏ கனிமொழி பேச்சால் மீண்டும் அரசியல் பரபரப்பு
