கனடாவுடன் முற்றும் மோதல்: கனடா தூதரை திரும்ப பெற்ற இந்தியா  

Estimated read time 1 min read

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், கனடாவில் உள்ள தனது உயர் ஸ்தானிகர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் பிற மூத்த இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகளை இந்தியா திங்களன்று திரும்பப் பெற்றது.
காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பான விசாரணையில் இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் பிற தூதரக அதிகாரிகளை ‘ஆர்வமுள்ள நபர்கள்’ என்று கனடா அறிவித்ததற்கு பதிலடியாக இந்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை வந்ததுள்ளது.
கனடாவிற்கான இந்திய உயர் ஸ்தானிகர் திரும்பப் பெறப்பட்டதை அறிவிக்கும் அறிக்கையில், வெளியுறவு அமைச்சகம் தீவிரவாதம் மற்றும் வன்முறை சூழலில், ட்ரூடோ அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இராஜதந்திரிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதாக அடிக்கோடிட்டுக் காட்டியது.

Please follow and like us:

You May Also Like

More From Author