இந்தியா முன்னேறுவதை வல்லரசு நாடுகள் விரும்பவில்லை – மோகன் பாகவத்

Estimated read time 0 min read

இந்தியா முன்னேறுவதை வல்லரசு நாடுகள் விரும்பவில்லை என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் பத்ம விருது பெற்றவர்களை ஒன்றிணைத்து அவர்களுடன் பொதுமக்கள் உரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ர் மோகன் பாகவத், இன்றைய இளம் தலைமுறை அடிமைத்தனத்தின் தாக்கங்களில் இருந்து விடுபட்டுள்ளது எனவும் யாராவது உண்மையை பேசினால் அவருக்கு ஆதரவாக நிற்க இளைஞர்கள் தயாராக உள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இந்தியா முன்னேறுவதை உலகில் எந்த சக்தியும் விரும்புவதில்லை எனவும் ஏனெனில், அவர்கள் அதிகாரத்தை மட்டுமே தேடுகிறார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்தியா வளர்ச்சி அடைந்தால் அவர்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிடும் எனக் கூறிய மோகன் பாகவத், தன்னை வெறுக்கும் அண்டை நாடுகளுக்குக் கூட இந்தியா உதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author