நடிகர் ஆர்யா சென்னையில் ஸீ ஷெல் என்ற பெயரில் உணவகங்களை நடத்தி வருகிறார்.
சென்னையில் பிரபலமான இடங்களான அண்ணா நகர், கீழ்பாக்கம், கொட்டிவாக்கம் மற்றும் வேளச்சேரியில் இந்த உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
இருப்பினும் இந்த சோதனைகளுக்கான உண்மையான காரணம் இன்னும் கூறப்படவில்லை.
நடிகர் ஆர்யா உணவாக பிசினஸ் தவிர, திரைப்பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தி ஷோ பீப்பிள் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் அவர், சமீபத்தில் சந்தானத்தை ஹீரோவாக வைத்து DD நெக்ஸ்ட் லெவல் படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் உள்ள நடிகர் ஆர்யாவின் உணவகங்களில் IT ரெய்டு
