“தொகுதி மறுவரையறை மசோதாவில் திமுகதான் கிங் மேக்கரா?”..

Estimated read time 1 min read

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாகக் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற வாக்கெடுப்பில், அவையின் மொத்த பலமான 528 உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு 352 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், 293 பலம் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) கூடுதலாக 5 வாக்குகள் சேர்த்து மொத்தம் 298 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் 54 வாக்குகள் பற்றாக்குறையால் மசோதா தோல்வியடைந்தது.

தற்போதைய சூழலில் திரிணாமுல் காங்கிரஸ் (20), உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (06) மற்றும் அகாலி தளம் (01) ஆகிய கட்சிகளின் அதிருப்தி வாக்குகளுடன் சேர்த்து என்டிஏ கூட்டணியின் பலம் 320-ஆக உயர்ந்துள்ள போதிலும், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்குத் தேவையான 360 என்ற இலக்கை எட்டப் புதிய கட்சிகளின் ஆதரவு அவசியமாகியுள்ளது.

இதனால் திமுகவின் முக்கியத்துவம் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது; மசோதாவுக்குத் திமுகவின் 22 வாக்குகளுடன், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் பிரிவு) கட்சியின் 8 வாக்குகள் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் 4 வாக்குகள் எனப் புதிய ஆதரவுகள் கிடைக்கும் பட்சத்தில் மொத்த பலம் 354-ஆக உயர்ந்து மசோதா நிறைவேறும் சூழல் உருவாகியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author