“திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு!”.. மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம்.. அறநிலையத்துறை அதிகாரிகளை வழிமறித்த CRPF வீரர்கள்.. மதுரையில் பரபரப்பு..!!!!!! 

Estimated read time 0 min read

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட உள்ள சூழலில், அந்த நிகழ்வில் பங்கேற்க வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் அதிகாரிகளைத் தடுத்து நிறுத்திய காட்சிகள் கவனத்தை ஈர்த்தன.

அப்போது அங்குக் கூடியிருந்த இந்து அமைப்பினர், இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து உரக்கக் கோஷங்களை எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இதனைத் தொடர்ந்து, வந்திருந்த அறநிலையத்துறை அதிகாரிகள் தாங்கள் யார் என்பதை உரிய முறையில் அடையாளப்படுத்தி அறிமுகம் செய்த பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தீபம் ஏற்றும் நிகழ்வு தொடர்பாக ஏற்கனவே எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், திருப்பரங்குன்றத்தில் நடந்த இந்தத் தடுப்பு மற்றும் கோஷ விவகாரம் குறித்துத் தகவல்கள் வேகமாகப் பரவி வருகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author