ஸ்டாலின் சொன்ன கட்டபொம்மன் – எட்டப்பன் அரசியல் பின்னணி!

Estimated read time 0 min read

வரலாறு எங்களை எட்டப்பர்களாக அல்ல, கட்டபொம்மன்களாகவே மதிப்பிடும் என தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.

கட்டபொம்மன் – எட்டப்பன் அரசியல் பின்னணி!

வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய தமிழகத்தின் விடுதலைப் போராட்ட வீரர். அவருக்குத் துரோகம் செய்து, ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து சதி செய்தவராக எட்டப்பன் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறார்.

கடந்த தேர்தல் காலத்தின்போது சென்னைக்கு வந்த ராகுல் காந்தி, திமுகவை ‘எட்டப்பன்கள்’ என விமர்சித்தார். இந்நிலையில், தற்போது திமுகவின் வரலாற்றுப் பங்களிப்பைப் பாராட்டிய ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், திமுகவை வரலாறு ‘கட்டபொம்மன்களாகவே’ நினைவுகூரும்; ‘எட்டப்பன்களாக’ அல்ல எனப் பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தியை ‘சகோதரர்’ எனக் குறிப்பிட்டபோதும், அவரது முந்தைய விமர்சனத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்டாலினின் இந்தப் பதிவு அமைந்துள்ளதாக அரசியல் பின்னணியில் பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author