விண்ணை பிளந்த ‘அரோகரா’ கோஷம் – திருப்பரங்குன்றம் கல்தூணில் தீபம் ஏற்றப்பட்டது..!

Estimated read time 1 min read

திருப்பரங்குன்றம் மலை கல்தூணில் இன்று மாலை 5 மணிக்குத் தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க, திருப்பரங்குன்றம் கல்தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 30 கிலோ எடைக்கொண்ட நெய், 50 மீட்டர் நீளம் கொண்ட பருத்தி திரி, 5 கிலோ எடைக்கொண்ட கற்பூரம் ஆகியவை மலை மீது மேள – தாளங்களுடன் கொண்டு வரப்பட்டன.

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதற்காக சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் நிர்வாகப் பொறுப்பாளர்களாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், வி. பார்த்திபன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மேற்பார்வையில்தான் திருப்பரங்குன்றம் கல்தூணில் தீபம் ஏற்றப்படவுள்ளது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் கல்தூணில் தீபம் ஏற்றப்பட்டது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தூணில் கார்த்திகை தீபத் திருநாளான கடந்த 24-ஆம் தேதி தீபம் ஏற்ற வேண்டுமென உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், வழக்கமாக உச்சிப் பிள்ளையார் கோயில் அருகேயுள்ள தீபமண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இது குறித்து கோயில் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும், உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றாததால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு விவாதங்களும் போராட்டங்களும் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு நேற்று (நவ.27) மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டுமென உத்தரவிட்டனர். மேலும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் மலைப்பகுதியில் அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா தர்ஹா ஆகிய இரு வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் மத்திய ரிசர்வ் காவல் படையினரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டனர்.

இதற்கிடையே, கோயில் அறங்காவலர் குழு இடைநீக்கம் செய்யப்பட்டு, ஓய்வு பெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் வி. பார்த்திபன் ஆகியோர் நிர்வாகப் பொறுப்பில் நியமிக்கப்பட்டனர். அவர்கள் நேற்று இரவே மதுரை வந்தடைந்த நிலையில், இன்று தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பாதுகாப்புப் பணிக்காக கோயம்புத்தூரிலிருந்து மத்திய ரிசர்வ் காவல் படையின் (CRPF) ஒரு பிரிவான விரைவு அதிரடிப் படை (Rapid Action Force – RAF) பட்டாலியன் மதுரை திருப்பரங்குன்றம் வந்தடைந்தது. இதையடுத்து திருப்பரங்குன்றம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதி முழுக்க பரபரப்பு நிலவி வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author