“திமுகவை நம் பக்கம் வைத்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைமையிடம் முன்பே சொன்னேன்”- ப. சிதம்பரம்

Estimated read time 1 min read

தவெகவிற்கு ஆதரவு அளத்தது சரிதான். ஆனால், வேறு சில விஷயங்கள் திமுகவுடனான உறவை சீர்குலைத்தது என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு ப. சிதம்பரம் அளித்த பேட்டியில், “திமுகவுக்கு மக்களவையில் 22 இடங்கள் உள்ளன. மாநிலங்களவையிலும் குறிப்பிடதக்க இடங்கள் உள்ளன. திமுகவை நம் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைமைக்கு முன்பே சுட்டிக்காட்டினேன். தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்தது சரியே. ஆனால் அதற்கு பிறகு நடந்த சில விஷயங்களால் திமுகவுடனான உறவு குலைந்துவிட்டது. சிலவற்றை கட்சிக்குள் மட்டுமே பேச முடியும், வெளியில் கூற முடியாது” என்றார்.

திமுக – காங்கிரஸ் இடையே சிக்கல் ஏற்படும் போதெல்லாம் ப.சிதம்பரம் இரு தரப்புக்கும் பாலமாகச் செயல்படுவார். 2026 தேர்தல் உடன்படிக்கையின் போது கூட ஸ்டாலினைச் சந்தித்துப் பேசி சுமூக முடிவை எட்டச் செய்தார். தற்போது மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் இன்றைய முக்கியச் சந்திப்பில் ப.சிதம்பரம் இடம்பெறவில்லை. திமுகவுடனான பேச்சை சிதம்பரம் தவிர்த்தாரா அல்லது காங்கிரஸ் மேலிடம் அழைக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author