உத்தரபிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் (AMU) புதன்கிழமை இரவு வாக்கிங் சென்ற ஒரு பள்ளி ஆசிரியர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட ராவ் டேனிஷ் அலி என அடையாளம் காணப்பட்டவர், பல்கலைக்கழகத்தின் ABK உயர்நிலைப் பள்ளியில் 11 ஆண்டுகளாக கணினி அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இரவு 8:50 மணியளவில் அலி தனது இரண்டு சக ஊழியர்களுடன் வளாக நூலகத்திற்கு அருகில் வாக்கிங்கிற்கு சென்றிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடந்தது.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில் வாக்கிங் சென்ற ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டார்
