சட்டசபையில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் விஜய், அதனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்று அறிவித்தார். இது குறித்து பேசிய எம்.எல்.ஏ சபரி அயங்கரன், கார் இல்லாததால் காதல் தோல்வி.. இன்று தலைவரால் வேலையும் கிடைத்து, காரும் கிடைத்துவிட்டது என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு விசிக எம்.எல்.ஏ ஜோதிமணி நன்றி தெரிவித்தார். அவர், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பயன்படுவார்கள் என்பதன் அடிப்படையில், நான் வைத்த கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் நிறைவேற்றி தந்ததற்கு எனது மனமார்ந்த நன்றி என்றார்.
அவரைத் தொடர்ந்து, அமைச்சர் ராஜ்மோகன், “இதில் எம்.எல்.ஏக்கள் மட்டுமல்ல ஓட்டுநர்கள், உதவியாளர்கள் என பலரும் மறைமுகமாக பயனடைவார்கள்” என்று தெரிவித்தார்.
சிறுபான்மை துறை அமைச்சர் ஷாஜகான், “முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இலவச மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு 5 லட்சத்திலிருந்து 25 லட்சம் உயர்த்தி தந்தது பொதுமக்களுக்கு பெரிய உதவி. ஒரே நாளில் இவ்வளவு இன்ப அதிர்ச்சி கொடுத்தால் எப்படி?
மக்களுக்கு மருத்துவ காப்பீடு, பால் விலை கொள்முதல் விலை ஏற்றம், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் உள்ளிட்ட திட்டங்களை அறிவித்த முதலமைச்சருக்கு, மனம் நிறைந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் பிரகாசம், “சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் கார் வழங்கி அறிவித்துள்ளார். அதுவே இனோவா கார் கொடுத்தால் நன்றாக இருக்கும். இனோவா கார் வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்று நகைச்சுவையாக நன்றி தெரிவித்தார்.
முதலமைச்சர் கொடுத்த காரில் தொகுதியை சுற்றி வருவதில்தான் கெத்து என எம்.எல்.ஏ எஸ்.காமராஜ் தெரிவித்தார்.
“அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் கார்” பாட்டு பாடி நன்றி சொன்ன தவெக எம்.எல்.ஏ.
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்… அவன் யாருக்காக கொடுத்தான்…. ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை… ஊருக்காக கொடுத்தான்… பாடல் பாடி தனது நன்றியை தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் சிந்து..
”கொடுத்ததெல்லாம் கொடுத்தார்”.. பாடல் பாடி நன்றி கூறிய MLA.. வெட்கப்பட்ட முதல்வர்!
Vijay Speech | TNAssembly 2026 | TVK | JCDprabhakar | Medical Department #NewsTamil24x7 #CMVijay pic.twitter.com/uPmgYzy1Ge
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) August 19, 2026
