சீனா மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஜுகு-3 ரக ராக்கெட்டை புதன்கிழமை காலையில் விண்ணில் ஏவியதுடன், அதன் முதல் கட்ட பகுதியான பூஸ்டரை தரைப்பகுதியில் உள்ள தளத்தில் பாதுகாப்பாக மீட்டெடுத்தது.
ஜுகுயே-3 Y2 ராக்கெட், வடமேற்கு சீனாவின் டோங்ஃபெங் வணிக ரீதியான விண்வெளி புத்தாக்க சோதனைத் தளத்திலிருந்து 19ஆம் நாள் காலையில் விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட்டின் முதல் கட்டப் பகுதியை தரைப்பகுதியில் இருந்து மீட்டெடுக்கும் பணி திட்டமிட்டபடி நிறைவடைந்தது. மேலும் இந்த ஏவுதல் பணி முழுமையான வெற்றியைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஜூகுயே-3 ராக்கெட்டின் பூஸ்டர் பகுதியை வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ள சீனா
கடந்த ஜூலை 10ஆம் நாளன்று லாங் மார்ச்-10B ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட பின் அதன் பூஸ்டர் பகுதி கடல்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வலையமைப்பு மூலம் வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மற்றொரு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தரை பகுதியிலேயே சீனா வெற்றிரமாக ராக்கெட் பூஸ்டரை மீட்டெடுக்கும் தொழில்நுட்பத்திலும், அந்நாட்டின் மறுபயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பத்திலும் இது ஒரு பெரும் திருப்புமுனையை வெளிக்காட்டுகிறது.
