பெய்ஜிங்கில் 2026 உலக ரோபோ மாநாடு தொடக்கம்

Estimated read time 1 min read

மனித-ரோபோ கூட்டுவாழ்வு, உற்பத்தி-தேவை ஒருங்கிணைப்பு என்பதை கருப்பொருளாக கொண்ட 2026ஆம் ஆண்டு உலக ரோபோ மாநாடு 19ஆம் நாள் பெய்ஜிங்கில் தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில், முக்கியக் கருத்தரங்கம், கண்காட்சி மற்றும் 70க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இக்கண்காட்சியில் கலந்துகொள்கின்றன. இது கடந்த ஆண்டை விட 69 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் 3000க்கும் மேற்பட்ட தயாரிப்புகளில், 300க்கும் மேற்பட்டவை முதன்முறையாக வெளியிடப்படுகின்றன. புதிதாக உருவாக்கப்பட்ட ரோபோ நுகர்வு தெரு, தொழில்நுட்பம், சுவைமிக்க உணவு, புத்தாக்கக் கலாச்சாரத் தயாரிப்புகள் ஆகியவை இணையும் தனித்துவமான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும்.

You May Also Like

More From Author