அண்மையில் சீனா சொந்தமாக உருவாக்கிய முதலாவது பெரிய ரக சுற்றுலா கப்பலான “அடோரா மேஜிக் சிட்டி” ஷாங்காய் துறைமுகத்தில் இருந்து பயணிக்கத் தயாராகிறது.
தற்போது இக்கப்பலின் செயலாக்கப் பிரிவுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. 30 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 1300 பணியாளர்கள் கப்பலை இயக்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தேவையான பல்வேறு பொருட்களும் திட்டத்தின்படி, கப்பலுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
323.6மீட்டர் நீளமும், 37.2மீட்டர் அகலமும் இந்தப் பெரிய ரக பயணியர் கப்பலின் மொத்த சுமையளவு ஒரு லட்சத்து 35ஆயிரத்து 500 டன் ஆகும். 20 அடுக்குகளைக் கொண்ட இக்கப்பலில் சுமார் 5000 சுற்றுலா பயணியர்கள் வரை பயணிக்கலாம்.