இந்தியாவில் முதலீடுகளை ஈர்ப்பதில் மிகச் சிறந்த சூழலைக் கொண்டுள்ள மாநிலங்களைக் கண்டறிய, நிதி ஆயோக் அமைப்பு முதன்முறையாக 2026 ஆம் ஆண்டிற்கான முதலீட்டாளர்களுக்கு உகந்த மாநிலங்கள் குறியீட்டை (Investment Friendliness Index 2026) வெளியிட்டுள்ளது.
மொத்தம் 17 முக்கிய பெரிய மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த விரிவான ஆய்வில், குஜராத் மாநிலம் 56.6 புள்ளிகளைப் பெற்று நாட்டின் முதன்மையான முதலீட்டுத் தலமாகத் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்தத் தரவரிசைப் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் 53.7 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், தமிழ்நாடு 53.3 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டிற்கு 3வது இடம்! 2026க்கான நிதி ஆயோக்கின் முதலீட்டாளர்களுக்கு உகந்த மாநிலங்கள் பட்டியல் வெளியீடு
