‘நாளை பாஜக அலுவலகத்திற்கு வருகிறேன்’: தனது உதவியாளர் கைதுக்கு பின் அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம் 

தனது உதவியாளர் பிபவ் குமார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “ஜெயில் பரோ” போராட்டத்தை அறிவித்துள்ளார்.

நாளை பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைமையகத்தில் மதியம் 12:00 மணியளவில் அனைத்து ஆம் ஆத்மி கட்சி(ஏஏபி) தலைவர்களும் கலந்துகொள்ளும் வகையில் போராட்டம் நடைபெறும் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

மே 13 ஆம் தேதி முதல்வர் கெஜ்ரிவால் இல்லத்தில் தன்னைத் தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறியதைத் தொடர்ந்து பிபவ் குமாரை டெல்லி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

More From Author