சீன ஊடக குழுமம் மற்றும் குவாங்சி ஜுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் அரசால் இணைந்து நடத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான ஆசியான் ஊடகப் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு வாரம், தெற்கு சீனாவின் குவாங்சி ஜுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நானிங் நகரில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில், சீனா மற்றும் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள், ஊடக வல்லுநர்கள், நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் “திறந்தநிலை, கலாச்சாரம், பகிரப்பட்ட வீடு” என்ற கருப்பொருளில் ஆழமான உரையாடல்கள் மற்றும் பரிமாற்றங்களை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய சீன-ஆசியான் சமூகத்தை கட்டியெழுப்ப ஊடக ஒத்துழைப்புக்கான புதிய பாதைகள் ஆராயப்பட்டன. இந்நிகழ்வின் தொடக்க விழாவில் ஆசியான் ஊடகப் பங்குதாரர்கள் “சீனா அப் க்ளோஸ்” குவாங்சி சுற்றுப்பயணம் தொடங்கப்பட்டது.இதில் ஆசியான் நாடுகளின் ஊடக நிறுவனங்களின் பத்திரிகையாளர்கள், சீன ஊடக குழுமம் மற்றும் உள்ளூர் ஊடக செய்தியாளர்களுடன் இணைந்து அடிமட்ட அளவில் உள்ளூர் சமூகங்கள் பற்றிய ஆழமான தகவல்களை வழங்கி, பல கண்ணோட்டங்கள் மூலம் சீனாவின் உயர்தர வளர்ச்சி மற்றும் துடிப்பான திறப்புப் பணியை வெளிப்படுத்தினர். மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கண்காட்சி மண்டலத்தில் சீன ஊடக குழுமத்தின் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளைப் பார்வையிட்டனர்.அதில் AI ஊடக பயன்பாடுகள், அதி-உயர்-வரையறை தயாரிப்பு அமைப்பு முறைகள் மற்றும் ஒருங்கிணைந்த குறுக்கு-திரை தொடர்பு ஆகியவற்றின் முன்னேற்றங்கள் காட்சிபடுத்தப்பட்டன.
