சீன-அமெரிக்க மக்களுக்கிடையில் நட்பார்ந்த கதைகள் தொடரும்: சீனா

பாலைவனக் கட்டுப்பாடு மற்றும் காடுகள் வளர்ப்பு பணியில் ஈடுபட்டு தேசிய முன்மாதிரி தொழிலாளர் என்ற பெருமை பெற்ற யின் யூஜென் அம்மையார் அண்மையில் இணையம் மூலம் முன்பு தனது பணிக்கு நன்கொடை வழங்கிய அமெரிக்க நண்பர் ரொனால்ட் ஸகோல்ஸ்கியைத் தேடி, இறுதியில் இணைய வழியாக மீண்டும் சந்தித்தார். நாடு கடந்த இந்த நல்ல செயலும் நட்புறவும் கவனத்தை ஈர்த்து பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் மே 25ஆம் நாள் கூறுகையில், 20க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் ஆசிரியராக பணிபுரிந்த ஸகோல்ஸ்கி 5000 டாலர் திரட்டி யின் யூசென் தம்பதிக்கு நன்கொடையாக வழங்கினார். தற்போது இந்த நன்கொடை 50 ஆயிரம் மரங்களாக மாறியுள்ளது. இது சீனா-அமெரிக்கா இடையே அரசு சாரா நட்பு பரிமாற்றத்துக்கான எடுத்துக்காட்டாகும். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கூறியதைப் போல், சீன-அமெரிக்க உறவு பற்றிய கதைகள் இருநாடுகளின் பொது மக்களால் எழுதப்படுகின்றன என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author