உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மக்களுக்கு எச்சரிக்கை!

வேலூரில் விடிய விடிய பெய்த கனமழையால் உத்திர காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஒடுகத்தூர், மேல் அரசம்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் 50 மி.மீ. மழை பதிவானது.

இதனையடுத்து உத்திரக்காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றுப்பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

You May Also Like

More From Author