நடுவானில் விமானம் குலுங்கி ஒருவர் பலி!

நடுவானில் விமானம் குலுங்கியதில் ஒருவர் பலியானார்.

லண்டனிலிருந்து சிங்கப்பூர் நோக்கி 211 பயணிகள், 18 ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த போயிங் ரக விமானம், நடுவானில் பறந்தபோது திடீரென சமநிலையை இழந்து குலுங்கியது.

மேலும், மேகக் கூட்டத்தில் மோதியதால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக பயணி ஒருவர் பலியானார்.

30 பேர் காயமடைந்தனர். இதனிடையே, விமானம் குலுங்கியதால் பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பயணிகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து வழங்குவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author