சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 28ஆம் நாள் 6ஆவது 7ஆவது சீன அரசுத் தலைவரின் கட்டளைகளைப் பிறப்பித்தார்.
முட்டுக்கட்டையில்லாத சுற்றுச்சூழல் ஆக்கப்பணி சட்டம்,28ஆம் நாள் நடைபெற்ற சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் 3வது கூட்டத்தொடரில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் செப்டம்பர் முதல் நாள் அமலுக்கு வரும் என்று சீன அரசுத் தலைவரின் 6ஆவது கட்டளையில் தெரிவிக்கப்பட்டது.
வெளிநாடுகளுடனான உறவு குறித்த சட்டம் 28ஆம் நாள் நடைபெற்ற சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் 3வது கூட்டத்தொடரில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் ஜுலை முதல் நாள் அமலுக்கு வரும் என்று சீன அரசுத் தலைவரின் 7ஆவது கட்டளையில் தெரிவிக்கப்பட்டது.