நாகரிகங்கள் வழியாக சுற்றுப் பயணம் எனும் நிகழ்ச்சி ஹாங்காங், மக்கௌவில் துவக்கம்

நாகரிகங்கள் வழியாக உலகளவில் சுற்றுப் பயணம் என்ற தலைப்பில் சீன ஊடகக் குழுமம் ஹாங்காங் மற்றும் மக்கௌவிற்கு வழங்கும் சிறப்பு கண்காட்சியின் துவக்க விழா இவ்விரு பிரதேசங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்றது.


சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநர் ஷென் ஹாய்சியோங் இவ்விழாவில் காணொளி வழியாக உரை நிகழ்த்துகையில், அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த உலகளாவிய நாகரிக முன்னெடுப்பின் வழிக்காட்டலில், சீன மக்கள் முயற்சியுடன் சீன நாகரிகக் கட்டுமானத்தில் ஈடுபட்டு, மனிதகுல நாகரிக வளர்ச்சியை முன்னேற்றி வருகின்றனர்.

ஹாங்காங் மற்றும் மக்கௌவைச் சேர்ந்த நண்பர்கள் நாகரிகங்களின் வழியான சுற்றுப் பயணத்தில் 5000 ஆண்டுகாலத்தை மீளாய்வு செய்து, வாழையடி வாழையாக பரவி வரும் தேசிய நாகரிகத்தையும் ஆழமான சீனப் பண்பாட்டையும் மேலும் அறிந்து கொண்டு, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் இணைய வரவேற்பதாகத் தெரிவித்தார்.

You May Also Like

More From Author