சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்தின் தலைவர் பாஹ், அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்கு மீண்டும் பேட்டியளித்தார். 9வது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவைப் பாராட்டியதோடு அவர் கூறுகையில், பனி விளையாட்டில் ஈடுபடுவது, பொருளாதாரச் செழுமையை முன்னேற்றி, பொது ஆரோக்கிய நிலையை உயர்த்தி, மக்களின் மன ஒற்றுமையை வலுப்படுத்துகிறது. ஒலிம்பிக் விளையாட்டைப் பொறுத்தவரை, பனி விளையாட்டுகள் புதிய வளர்ச்சி நிலையில் நுழைந்துள்ளது. பலதரப்புவாத ஒத்துழைப்பு சிந்தனையில் எப்போதும் ஊன்றி நிற்கும் சீனா, சர்வதேச ஒலிம்பிக் ஆணையம் தனது கடமையை நிறைவேற்றுவதற்கு ஆதரவளித்து வருகிறது. பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள் ஒன்றுகூடி அமைதியான முறையில் போட்டிகளில் விளையாடுவதற்கு சீனா பாடுபட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், விளையாட்டு இலட்சியத்துக்கு அளித்த முக்கியத்துவம், எனக்கு பெரும் ஊக்கம் அளித்துள்ளது என்றும் பாஹ் தெரிவித்தார்.
சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்தின் தலைவர் சி எம் ஜிக்குப் பேட்டி
