பங்களாதேஷில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, சிறுபான்மை சமூகங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக அந்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான இந்துக்கள் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 10) நடந்த இந்த போராட்டம், இந்து சமூகத்தின் மிகப்பெரிய ஆர்ப்பாட்டமாக அமைந்தது.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் அகற்றப்பட்ட பின்னர் பல வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து அவர்கள் நீதி மற்றும் பாதுகாப்பைக் கோரி இந்த போராட்டத்தை நடத்தினர்.
குறிப்பாக, டாக்கா, சட்டோகிராம், பாரிசல், தங்கைல் மற்றும் குறிகிராம் உள்ளிட்ட நகரங்களில் போராட்டக்காரர்கள் அதிக அளவில் கூடினர்.