6-ம் கட்ட மக்களவை தேர்தலில் முற்பகல் 11 மணி நிலவரப்படி 25 புள்ளி ஏழு ஆறு சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற்று வருகிறது.
இதுவரை 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தற்போது வரை 428 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், 6-ம் கட்டமாக 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் முன்னாள் முதலமைச்சர்கள் மனோகர்லால் கட்டார், மெகபூபா முப்தி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் மேனகா காந்தி, தொழிலதிபர் நவீன் ஜிண்டால் உள்பட மொத்தம் 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வரிசையில் நின்று மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
முற்பகல் 11 மணி நிலவரப்படி 25 புள்ளி ஏழு ஆறு சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 36 புள்ளி எட்டு எட்டு சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. ஜார்க்கண்டில் 27 புள்ளி எட்டு சதவீதம் வாக்குகளும், உத்தரப் பிரதேசத்தில் 27 புள்ளி பூஜ்யம் ஆறு சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.