சுருளி அருவியில் குளிக்க அனுமதி அளித்தது வனத்துறை!

தேனி மாவட்டம் கம்பம் சுருளி அருவியில் நீர்வரத்து சரியானதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் கனமழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்தது. இந்நிலையில் தற்போது மழையின் அளவு குறைந்து நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்து உத்தரவிட்டது.

You May Also Like

More From Author