காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகக் கர்நாடக அரசுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தமிழக முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூரு செல்லவுள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாகத் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.
இந்த ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தைக் கூறி, தமிழகத்திற்கு சட்டப்பூர்வமாக கிடைக்க வேண்டிய காவிரி நீரைத் திறந்துவிடக் கர்நாடக அரசு மறுத்து வருகிறது.
இதனால் காவிரி டெல்டா பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை, இந்த ஆண்டு போதிய நீர் இருப்பு இல்லாததால் குறித்த நாளில் திறக்கப்படாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
காவிரி மற்றும் மேகதாது விவகாரம்: ஆகஸ்ட் 3-இல் பெங்களூரு செல்கிறார் முதல்வர் விஜய்
