சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) அபாயகரமான “சூப்பர்பக்” கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது நாசாவின் விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சக பணியாளர்களுக்கு உடல்நலக் கவலைகளை எழுப்பியுள்ளது.
Enterobacter bugandensis என அடையாளம் காணப்பட்ட பாக்டீரியா, ISS இன் தனித்துவமான மூடிய சூழலில் உருவான பல்-மருந்து எதிர்ப்பு கிருமியாகும்.
விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் பாக்டீரியத்தின் விகாரங்களைக் கண்டறிந்த விஞ்ஞானிகளால் தான் இந்த பாக்டீரியாவின் இருப்பு பற்றியும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பாக்டீரியா சுவாச மண்டலத்தை பாதிக்கலாம்.