சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள நார்வே தலைமையமைச்சர் ஜோனஸ் கஹ்ர் ஸ்டோருடன் செப்டம்பர் 9ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், சீன-நார்வே நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வளர்ப்பது இரு நாட்டு மக்களின் பொது விருப்பத்திற்கும் இரு நாடுகளின் அடிப்படை நலன்களுக்கும் ஏற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரியாற்றல் மாற்றம், கடல் போக்குவரத்து, மின்சார வாகனம் முதலிய துறைகளில் நார்வேயுடன் இணைந்து பயனுள்ள ஒத்துழைப்பை விரிவாக்கி மக்களுக்கிடையே உள்ள தொடர்பு குறிப்பாக இளைஞர்களுக்கிடையே உள்ள பரிமாற்றத்தை நெருக்கமாக்கச் சீனா விரும்புகிறது என்றார்.
நார்வே-சீன தூதாண்மையுறவு நிறுவப்பட்ட கடந்த 70ஆண்டுகளில், இரு நாட்டுறவு சீராக வளர்ந்து வருகிறது. சீனாவின் இறையாண்மையை நார்வே மதித்து ஒரே சீனா என்ற கொள்கையைப் பின்பற்றி வருகிறது என்று ஸ்டோர் கூறினார்.
பரஸ்பர மைய நலன்கள் மற்றும் முக்கிய கவலைகளில் ஒன்றுக்கொன்று மதிப்பளித்து சீனாவுடன் பரஸ்பர கற்றல், பரிமாற்றம், பரஸ்பர நன்மை மற்றும் கூட்டு வெற்றியைத் தொடர விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.