சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருந்த சாலமன் தீவுகள் நாட்டின் தலைமையமைச்சர் மனசே சோகவரே சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், சீனாவுடன் தூதாண்மை உறவை உருவாக்குவது என்பது, சாலமன் தீவுகள் நாடு மேற்கொண்ட மிக சரியான முடிவுகளில் ஒன்றாகும் என்றார். மேலும், வறுமை ஒழிப்புப் பணியில் சீன அரசு பெற்றுள்ள சாதனைகளுக்குப் பாராட்டு தெரிவித்த அவர், சீனாவுடன் ஒத்துழைப்புகளின் மூலம், சொந்த நாட்டின் வளர்ச்சியை முன்னேற்ற எதிர்பார்ப்பு தெரிவித்தார். தவிரவும், இரட்டை வரையறை மேற்கொண்டு, பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டு வருகின்ற குறிப்பிட்ட சில நாடுகளுக்கு அவர் கண்டனத்தையும், ஜப்பானின் கழிவு நீர் கடலில் வெளியேற்றப்படும் பிரச்சினையின் மீது பசிபிக் பெருங் கடல் தீவு நாடுகளின் கவனத்தையும் அவர் தெரிவித்தார்.
சாலமன் தீவுகள் நாட்டின் தலைமையமைச்சரின் பேட்டி
Estimated read time
0 min read