இந்தியாவின் சந்திரயான்-3 திட்டமானது அதன் முதலாம் ஆண்டு நிறைவுக்கு சற்று முன்னதாக ஒரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பை செய்துள்ளது.
தரையிறங்கும் இடத்தைச் சுற்றியுள்ள ரெகோலித் அல்லது சந்திர மண், ஒரு சீரான தனிம அமைப்பைக் கொண்டிருப்பதை பிரக்யான் ரோவர் கண்டறிந்துள்ளது.
முக்கியமாக ஃபெரோன் அனர்த்தோசைட் பாறையால் ஆனது எனவும் கண்டறிந்துள்ளது.
இந்த கண்டுபிடிப்பு நிலவில் ஒரு பண்டைய மாக்மா கடல் கோட்பாட்டை ஆதரிக்கிறது.
பிரக்யான் ரோவரின் பேலோடுகளில் ஒன்றான ஆல்பா பர்டிகுலர் எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் (APXS) மூலம் எடுக்கப்பட்ட அளவீடுகளிலிருந்து தரவு பெறப்பட்டது.
நிலவின் மேற்பரப்பில் சந்திரயான்-3 இன் அதிமுக்கிய தனிம கண்டுபிடிப்பு
You May Also Like
நாளை விண்வெளிக்கு பயணமாகிறார் சுபன்ஷு ஷுக்லா
June 24, 2025
இஸ்ரோவின் வீனஸ் மிஷன் 2028 ஏவலுக்கு திட்டமிடப்பட்டுள்ளது
October 4, 2024