நேற்று புதன்கிழமை மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கில், விண்வெளித் துறையில் 100% நேரடி அந்நிய முதலீட்டை (FDI) அனுமதிக்கும் விதிகளை இந்தியா தளர்த்தியுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில், நிலவின் ஆராயப்படாத தென் துருவத்திற்கு அருகே விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு – மற்றும் மென்மையான தரையிறக்கத்தை அடைந்த நான்காவது நாடு – என்ற சாதனைக்கு பின்னர் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு ஒரு உத்வேகம் கிடைத்தது.
அதன் தொடர்ச்சியாகவே இந்த விதி தளர்தலுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய FDI கொள்கை சீர்திருத்தம், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் நாட்டில் உற்பத்தி வசதிகளை நிறுவ நிறுவனங்களை அனுமதிக்கும் என்றும் மத்திய அரசு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.