“நாகரிகம் வழியே பயணம்”என்ற ஆவணத்திரைப்படம் ஒளிபரப்பு

“நாகரிகம் வழியே பயணம்”என்ற ஆவணத்திரைப்படம் ஒளிபரப்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வழங்கிய ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவை ஆழமாக விளக்கிக் கூறி, இம்முன்மொழிவு முன்வைக்கப்பட்ட கடந்த 10 ஆண்டுகளில் முக்கிய சாதனைகளைத் தொகுத்து, மனிதப் பொது சமூக ஆக்கப்பணிக்கான முக்கியத்துவத்தைக் காட்டும் விதம், சீன ஊடகக் குழுமம், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணியின் தலைமை அலுவலகத்துடன் இணைந்து, “நாகரிகம் வழியே பயணம்”என்ற ஆவணத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படம், அக்டோபர் 11ம் நாள் முதல் 16ம் நாள் வரை ஒளிபரப்பப்படுகிறது.
மேலும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை சர்வதேசத் திரைப்பட ஒத்துழைப்பின் சாதனைகள் பற்றிய செய்தியாளர் கூட்டம் 16ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை துணைத் தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹாய் ஷியொங் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author