சீன – அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் தொலைப்பேசி உரையாடல்

சீன வெளியுறவு அமைச்சர் சின்காங், ஜுன் 14ஆம் நாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டோனி பிளின்கனுடன் தொலைப்பேசி மூலம் உரையாடினார்.


அப்போது சின்காங் கூறுகையில்
இவ்வாண்டின் தொடக்கம் முதல், சீன – அமெரிக்க உறவில் புதிய சிக்கல் மற்றும் அறைகூவல் ஏற்பட்டுள்ளது. அதற்கு யார் பொறுப்பேற்பது என்பது தெளிவாக உள்ளது.

ஒன்றுக்கொன்று மரியாதை அளித்தல், அமைதியான சக வாழ்வு, ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி என்ற கோட்பாடுகளைப் பின்பற்றி வரும் சீனா, இரு நாட்டுறவைக் கையாண்டு வருகிறது என்று சுட்டிக்காட்டினார்.
தைவான் விவகாரம் உள்ளிட்ட சீனா கவனம் செலுத்தி வரும் முக்கிய விவகாரம் குறித்து சீனா தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியதோடு, அமெரிக்கா இதற்கு மரியாதை அளித்து, சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் சின்காங் வலியுறுத்தினார்.


மேலும், பாலி தீவில் இரு நாட்டுத் தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய ஒருமித்த கருத்துக்கள் மற்றும் அமெரிக்கா அளித்துள்ள வாக்குறுதி ஆகியவற்றை நடைமுறைக்கு கொண்டு வந்து, இரு நாட்டுறவை சீரான மற்றும் நிலையான வளர்ச்சி வழிக்கு கொண்டு வர வேண்டும் என்றார் அவர்.

Please follow and like us:

You May Also Like

More From Author