செங்கல்பட்டு கருநிலம் லஷ்மி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

Estimated read time 0 min read

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அடுத்துள்ள கருநிலம் கிராமத்தில் மிக பழமையான லஷ்மி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் மகா சாந்தி ஹோமம் நடைபெற்றது. நேற்று காலை விஸ்வரூப தரிசனமும், மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author