சென்னையில் திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் தான் நாடாளுமன்ற தேர்தல் எந்தவித கலவரமும் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாடு தான் ஜனநாயகத்தை காப்பாற்றியது என்று சொல்லக்கூடிய அளவுக்கு தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் பிறகு அதிமுக பாஜகவுடன் இணைய வேண்டும் என்று ப. சிதம்பரம் கூறினார்.
அதற்கு ஏற்றார் போன்று ஒரு நொண்டி சாக்கை கூறி விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுகவினர் புறக்கணித்துள்ளனர். ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கட்சி பல இடங்களில் டெபாசிட் இழந்ததால் இந்த தேர்தலிலும் டெபாசிட் இழந்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கல் ஆகிவிடும். அவர்கள் பாஜகவுடன் மறைமுக உறவு அமைக்க பார்க்கிறார்கள் மேலும் அதனால் தான் விக்கிரவாண்டி இடை தேர்தலை அவர்கள் புறக்கணித்துள்ளதாக நினைக்கிறேன். ஆனால் எதையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் கூறினார்.