சாரல் மழையால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்றுவட்டாரத்தில் பெய்த சாரல் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஓசூரில் சுட்டெரித்து வந்த கோடை வெயிலால், பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.

இந்நிலையில் ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான சூளகிரி, பேரிக்கை உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து சில்லென காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

You May Also Like

More From Author