இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே வெள்ளிக்கிழமை “அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக” கைது செய்யப்பட்டதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கே, 2023 செப்டம்பரில் பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தில் தனது மனைவிக்கான விழாவில் கலந்து கொள்ள லண்டனுக்கு சென்றது குறித்து விசாரிக்கப்பட்ட பின்னர், அவர் காவலில் எடுக்கப்பட்டதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.
“நாங்கள் அவரை கொழும்பு கோட்டை நீதவான் முன் ஆஜர்படுத்துகிறோம்,” என்று அந்த அதிகாரி கூறினார்.
தனிப்பட்ட நோக்கங்களுக்காக அரசு வளங்களைப் பயன்படுத்தியதற்காக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது
