கபீர் புரஸ்கார் விருது…. டிசம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழக முதலமைச்சரால் வழங்கப்படும் சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் தமிழக முதல்வரால் குடியரசு தின விழாவின்போது இந்த விருது வழங்கப்படும் நிலையில் தமிழகத்தில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் இந்த விருதை பெறுவதற்கு தகுதியுடையவர்கள்.

இந்த விருது மூன்று அளவுகளில் தலா ஒரு நபர் வீதம் மூன்று பேருக்கு வழங்கப்படும். அதில் 20000 ரூபாய், பத்தாயிரம் ரூபாய் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் காண காசோலை மற்றும் தகுதி உரை ஆகியவை வழங்கப்படும் நிலையில் இந்த விருது பெறுவதற்கு விருப்பமுள்ளவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

More From Author