சென்னையில் INDIA TODAY நடத்தும் கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
சட்டமன்ற தேர்தலில் 12 சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வெல்லும் என கருத்துக்கணிப்பு வந்துள்ளது. கருத்துக்கணிப்பில் எங்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்குமான வாக்கு வித்தியாசம் 12 சதவீதம் தான். தமிழக மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்று எடுத்து கணக்கெடுப்பில் திமுக கூட்டணி வெல்லும் என தெரியவந்துள்ளது.
இந்தியா டூடே கருத்து கணிப்பில் தி.மு.க கூட்டணி 40% ஆதரவுடன் முன்னிலையில் உள்ளது. தி.மு.க-விற்கும் அடுத்து இருக்க கூடிய கட்சிக்கும் வித்தியாசம் 12 சதவீதம். இது Simple Arithmetic தான். வெறும் 3 சதவீதம் இருந்தாலே Clean Sweep. 12 சதவீதம் என்றால் நிச்சயம் ‘THUMPING VICTORY’ தான்.
திமுக அரசின் சாதனை திட்டங்களால் 65-க்கும் மேற்பட்ட விருதுகள் தமிழ்நாட்டை தேடி வந்துள்ளது.
தமிழ்நாட்டிற்கும் திமுக அரசிற்கும் குடைச்சல் கொடுப்பதில் மத்திய பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது.
திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிப்பயணத்தில் தமிழ்நாடு வரலாறு காணாத வகையில் வெற்றிநடை போட்டுச் செல்கிறது. இந்த வெற்றிப்பயணம் திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் தொடரும்.2021 தேர்தலை விட 2026 தேர்தலில் திமுக கூட்டணி அதிகமான இடங்களைப் பெறும்.
திராவிட மாடல் அரசின் 5 ஆண்டுகால சாதனைகளை சொல்லி மக்களிடத்தில் நாங்கள் வாக்கு கேட்போம்.
பா.ஜ.கவின் வெறுப்பு அரசியலுக்குத் துணையாக இருப்பது அடிமைகள் மற்றும் அவதூறுகள். இவற்றைப் பயன்படுத்தி ஜனநாயகத்தின் விழுமியங்களை அழிக்கப் பார்க்கிறார்கள்.தமிழ்நாட்டிற்கு நன்மை செய்வார்கள் என்றுதான் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால், அவர்கள் ஒன்றிய பட்ஜெட்டில் கொடுத்தது ஜீரோதான். வரும் சட்டமன்றத் தேர்தலில் NDA கூட்டணிக்குத் தமிழ்நாட்டு மக்கள் திருப்பிக் கொடுக்கப் போவது ஜீரோதான்.
திமுக- காங்கிரஸ் இணைந்துதான் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும்.ஆட்சியில் பங்கு என்ற பேச்சே தற்போது எழவில்லை.ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு பொருந்தாத கோரிக்கை. அது எங்களை விட அவர்களுக்கு நன்றாக தெரியும். நாங்கள் ஒற்றுமையாக இருப்பதை பிடிக்காதவர்கள் செய்யும் திட்டமிட்ட சதி தான் அந்த கோஷம்.
