“தேர்தலில் 2.5 கோடி வாக்குகளை பெற வேண்டும்”- மு.க.ஸ்டாலின்

Estimated read time 1 min read

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில் திமுகவின் சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களின் வாக்குச்சாவடி மைய பாக முகவர்கள், பாக உறுப்பினர்கள் மற்றும் டிஜிட்டல் ஏஜென்ட் ஆகியோருடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இதில் சென்னை, விழுப்புரத்தை சேர்ந்த சுமார் 1.7 லட்சம் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திமுகவினரின் எழுச்சியை பார்த்தது எனக்கு எனர்ஜி பூஸ்ட் அளித்தது போல் உள்ளது. 49 தொகுதிகளின் வெற்றியை உறுதி செய்ய இந்த மாநாட்டில் கூடியிருக்கிறோம்.

சென்னையும் வடதமிழ்நாடும் எப்போதும் திமுகவின் கோட்டை என்று நிரூபித்து காட்ட வேண்டும். தேர்தல் பணி என்றால் திமுக தொண்டர்களுக்கு ஈடு இணையே இல்லை. தேர்தல் களத்தில் திமுகதான் ஹீரோ. இந்தியாவில் வேறு எந்தக் கட்சிக்கும் இல்லாத கட்டமைப்பு திமுகவுக்கு உள்ளது.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 350 வாக்குகள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை அடைந்தால் வெற்றி நிச்சயம். ஒவ்வொரு முகவரும் தலா 50 வாக்குகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். 1.14 லட்சம் குடும்பங்கள் திமுகவில் இணைந்துள்ளார்கள். தேர்தலில் 2.5 கோடி வாக்குகளை பெற வேண்டியது கட்டாயம்.

திமுக மகளிர் படையினர் வீடு, வீடாக சென்று பிரச்சாரம் செய்யவுள்ளனர். ஒவ்வொரு வீட்டையும், ஒவ்வொரு வாக்கையும் இலக்காக வைத்து பிரச்சாரத்தை உருவாக்கி உள்ளோம். உங்கள் உழைப்பில்தான் திமுக 7-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. பரப்புரையின் கடைசி நிமிடம் வரை திமுகவினர் வாக்கு சேகரிக்க வேண்டும். தேர்தல் என்றால் மக்கள்தான் எஜமானர்கள். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு ஆதரவான நிலைதான் நிலவுகிறது. அதனை வாக்குகளாக மாற்ற வேண்டும். 200 தொகுதிகளுக்கு மேல் நம்மால் வெல்ல முடியும். 2021 ஆம் ஆண்டைவிட தற்போது திமுகவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. வாக்குப்பதிவு முடிந்து இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு எடுத்துச் செல்லும் வரை விழிப்புடன் இருக்க வேண்டும் திராவிட மாடல் ஆட்சி வந்தால்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடரும் என்று மக்களிடம் நம்பிக்கை விதைக்க வேண்டும்” என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author