கோடைகால தாவோஸ் மன்றக்கூட்டத்தில் பங்கெடுத்துள்ள வியட்நாமின் தலைமையமைச்சர் ஃபம் மின் சின்னை (Pham Minh Chinh) சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜுன் 26ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்து உரையாடினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், நெடுநோக்கு முக்கியத்துவம் வாய்ந்த சீன-வியட்நாம் பொது எதிர்கால சமூகத்தை அமைப்பது, இரு நாடுகளின் நவீனமயமாக்க கட்டுமானத்தின் தேவைக்கு ஏற்புடையது. அதேவேளையில், அது பிராந்தியத்தின் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு துணைபுரியும் என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், விரிவாகவும் ஆழமாகவும் சீர்திருத்தம் செய்வதை சீனா கடைபிடித்து, நவீன மயமாக்கத்தை முன்னேற்றி வருகின்றது. இது, பொருளாதாரம், வர்த்தகம், ஒன்றுக்கு ஒன்று தொடர்பு, எண்ணியல் பொருளாதாரம் உட்பட்ட துறைகளில் இரு தரப்புசார் ஒத்துழைப்பை விரிவாக்குவதற்கு புதிய வாய்ப்புகளைக் கொண்டு வரும். அதிகமான சீனத் தொழில் நிறுவனங்கள் வியட்நாமில் முதலீடு செய்வதற்கு சீனா ஊக்கமளிக்கிறது. அதேவேளையில், வியட்மாநமில் சீனத் தொழில் நிறுவனங்களுக்கு, நியாயமான வணிகச் சூழல் கிடைக்கச் செய்ய என விரும்புகின்றேன் என்று தெரிவித்தார்.
ஃபம் மிந்ன் சின் கூறுகையில், தைவான் பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாட்டை வியட்நாம் ஆதரிப்பதுடன், ஒரே சீனா என்ற கொள்கையை உறுதியாக பின்பற்றி வருகிறது என்று தெரிவித்தார். மேலும், வியட்நாம்-சீன பரஸ்பர நம்பிக்கை மற்றும் நடைமுறை ஒத்துழைப்பை ஆழமாக்குதல், நெடுநோக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொது எதிர்கால சமூகத்தை உருவாக்குவது ஆகியவற்றுக்கு, வியட்நாமின் வெளிநாட்டு கொள்கைகளில் சீனாவுக்கு முன்னுரிமை அளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.