தமிழக தேர்தல் 2026: அதிமுக – தவெக கூட்டணி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி  

Estimated read time 1 min read

தமிழகச் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.
இந்தச் சூழலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் இணையப் போவதாகவும், அதற்கு பதிலாக 50 தொகுதிகள் மற்றும் துணை முதலமைச்சர் பதவி கேட்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
இந்தத் தகவல்களை திட்டவட்டமாக மறுத்துள்ள தவெக,”அதிமுக, பாஜக, சசிகலா அல்லது பாமக ஆகிய தரப்பினருடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை. அரசியல் லாபத்திற்காகவும், தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிக்கவும் திமுக-வினரால் இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் பரப்பப்படுகின்றன” என அறிக்கை வெளியிட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author