NDA-தவெக கூட்டணி? விஜய்க்கு 80 இடங்கள் மற்றும் துணை முதல்வர் பதவி?  

Estimated read time 1 min read

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தை (தவெக) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைக்கப் பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நம்பத்தகுந்த வட்டாரங்களின்படி, விஜய்யிடம் பாஜக முன்வைத்துள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
80 தொகுதிகள்: சட்டமன்றத் தேர்தலில் தவெக போட்டியிட சுமார் 80 தொகுதிகள் ஒதுக்கீடு.
துணை முதல்வர் பதவி: தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைந்தால், விஜய்க்கு துணை முதல்வர் பதவி.
பவன் கல்யாண் மாடல்: ஆந்திராவில் பவன் கல்யாண் பாணியில், ஒரு மாநிலத்தின் துணை முதல்வர் மூலமாகவே இந்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

You May Also Like

More From Author