சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவு கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, இவ்வாண்டில் ஏப்ரல் 30ஆம் நாள் வரை, சீனாவில் 75 சர்வதேச சரக்கு விமான வழித்தடங்கள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன.
அவற்றில் ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கான விமான வழித்தடங்கள் முக்கியமானதாகும். ஆசியாவில் 35 ஐரோப்பாவில் 31 விமான வழித்தடங்கள் உள்ளன. எல்லை கடந்த மின் வணிகப் பொருட்கள், புதிய உணவுப் பொருட்கள், மின்னணு பொருட்கள், வாகன உதிரிப் பாகங்கள் ஆகிய பொருட்கள் இந்த வழித்தடங்களில் அனுப்பப்பட்டுள்ளன.
அமெரிக்கா கூடுதல் சுங்க வரியை வசூலித்து சர்வதேச சரக்கு ஒழுங்கு முறையைச் சீர்குலைத்து வரும் நிலையில், சீனா உயர் நிலையான வெளிநாட்டுத் திறப்பைத் தொடர்ந்து முன்னேற்றி வர்த்தகப் பாதைகளை இடைவிடாமல் மேம்படுத்தி வருகிறது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.