
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் பரப்புரைக்கான நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிரடியாக அறிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பரப்புரையில் ஈடுபட வேண்டும் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த நேரக்கட்டுப்பாட்டை மீறி யாராவது பரப்புரை செய்தால், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பரப்புரைகளுக்கு அனுமதி பெறுவதிலும் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார். இனி அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தங்களது பரப்புரைக்கான அனுமதியை ஆன்லைன் வாயிலாக மட்டுமே கோர வேண்டும் என்றும், நேரடி அனுமதிக்கு இடமில்லை என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் இந்த கிடுக்கிப்பிடி உத்தரவுகளால், தேர்தல் களம் தற்போதே பரபரப்படையத் தொடங்கியுள்ளது.
